நாமக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி! 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்..

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையில் "போதை வேண்டாம்" என்று எழுதி கையெழுத்து இட்டார் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்து இட்டனர்.
நாமக்கல்லில் மாவட்டக் காவல் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெற்ற, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாமக்கல் மாவட்டக் காவல் அலுவலகம், ஆயுதப்படை வளாகத்தில் இருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச.இராஜேஸ் கண்ணன், இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் 6 வயதிற்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு 600 மீட்டர், 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 2 கிலோமீட்டர், 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 3 கிலோமீட்டர், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 கிலோமீட்டர் ஆகிய 4 பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறுவர்- சிறுமிகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி திருச்செங்கோடு சாலை, பொரசபாளையம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக மாரத்தான் ஓட்டம் இடம்பெற்றது.
இன்றைய மாணவர்கள், நாளை போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவார்கள்.எனக்கு வேண்டாம் உனக்கு வேண்டாம் போதைப் பொருட்கள்.ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
முன்னதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையில் போதை வேண்டாம் என்று எழுதி கையெழுத்து இட்டார், தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி கையெழுத்து இட்டனர்.நிறைவாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள், கிஃப்ட் வுச்சர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் விளம்பரதாரர்கள் வழங்கிப் பாராட்டினார்கள். மூன்று பிரிவுகளில், முதல் 2 இடம் பிடித்தவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு பணப்பரிசும் வழங்கினர். மேலும், நாமக்கல் மாவட்ட காவல் துறையில் இருந்து கலந்துகொண்டு மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணப்பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Next Story