ராமானூரில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர் எஸ் எஸ் ஊர்வலம் துவங்கியது.
Karur King 24x7 |6 Oct 2024 1:27 PM GMT
ராமானூரில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர் எஸ் எஸ் ஊர்வலம் துவங்கியது.
ராமானூரில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர் எஸ் எஸ் ஊர்வலம் துவங்கியது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானுர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் முன்பு ஆர்எஸ்எஸ் பேரணி துவங்கியது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் 99ம் ஆண்டு விஜயதசமி விழா, ஸ்ரீ அஹல்யாபாய் ஹொல்கர் 300வது ஜெய்ந்தி விழா, சுப்பிரமணிய சிவா 140 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அமைப்பின் நகர செயலாளர் பாலசுப்பிரமணிய தலைமையில் பேரணி நடைபெற்றது. முன்னதாக ஆர் எஸ் எஸ் கொடியை சேவகர்கள் வழங்க அதனைப் பெற்றுக் கொண்ட பிறகு, ஆரத்தி எடுத்து பேரணியை வழி அனுப்பி வைத்தனர். இந்த பேரணியானது ராமகவுண்டனூர் வடக்கு காந்திகிராமம், ஈபி காலனி வழியாக கரூர் மாநகராட்சி அருகில் உள்ள பூங்காவை சென்றடைந்தது. இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராணுவ மிடுக்கோடு அணிவகுத்து சென்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story