அருப்புக்கோட்டை அருகே 500 வது குட்டை நிறைவு செய்த பணிகளை கொட்டும் மழையில் ஆய்வு செய்தபின் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேட்டி*

அருப்புக்கோட்டை அருகே 500 வது குட்டை நிறைவு செய்த பணிகளை கொட்டும் மழையில் ஆய்வு செய்தபின் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேட்டி*
X
2,000 புதிய குட்டைகள் தோண்டும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது - 500 வது குட்டை நிறைவு செய்த பணிகளை கொட்டும் மழையில் ஆய்வு
வரும் பிப்ரவரி மாதத்திற்குள் விருதுநகர் மாவட்டத்தில் 2,000 புதிய குட்டைகள் தோண்டும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது - அருப்புக்கோட்டை அருகே 500 வது குட்டை நிறைவு செய்த பணிகளை கொட்டும் மழையில் ஆய்வு செய்தபின் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேட்டி விருதுநகர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையிலும் புதிதாக சுமார் 2000 குட்டைகள் தோண்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அருப்புக்கோட்டை அருகே தொட்டியாங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ 16 மற்றும் ரூபாய் 11 லட்சம் மதிப்பில் இரண்டு குட்டைகள் வெட்டப்பட்டுள்ளது. 2,000 குட்டைகள் வெட்டும் திட்டத்தில் 500 ஆவது குட்டையாக வெட்டப்பட்டு நிறைவு செய்த இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌, விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பதற்காகவும் நிலத்தடி நீர் பெருகுவதற்காகவும் 2,000 சிறிய அளவிலான குட்டைகள் தோண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு தற்போது 500 ஆவது குட்டையை நிறைவு செய்துள்ளோம். வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் விருதுநகர் மாவட்டத்தில் 2000 புதிய‌ குட்டைகள் தோண்டி முடிக்கப்படும். அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் ரூ 150 கோடியை அறிவித்துள்ளார்.‌ விருதுநகர் மாவட்டம் வறண்ட மாவட்டம் இங்கு அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேவை இருக்கிறது நிலத்தடி நீர்மட்டம் தேவை உள்ளது. ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் தேவை உள்ளது அதை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் விரைவாக இந்த பணிகளை செய்து வருகிறார் முதலமைச்சருக்கு நன்றி என பேசினார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story