ஆம்பூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் மேலும் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர் அப்போது காரில் மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் இருப்பது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 45 மூட்டைகளில் இருந்த ஹான்ஸ்,குட்கா உள்ளிட்ட 500 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜாவித், வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியை சேர்ந்த முஜமில், உதயேந்திரம் பகுதியை சேர்ந்த முகமது அப்ரார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை கன்னிகாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து ஆம்பூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த ஆம்பூர் நகர போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்
Next Story

