ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பாக பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

X
விருதுநகரில் ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பாக பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... *விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் பாண்டித்துரை மற்றும் மாவட்டச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கடந்த 1 -4 - 2003 க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்,காலவரையின்றி முடுக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்,இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் உடனடியாக களையப்பட வேண்டும் அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், 21 மாதம் ஊதியம் மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும் , உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சங்கத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்ககளின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக தண்டனை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

