ஜப்பான் கராத்தே மாஸ்டரிடம் சிறப்பு பயிற்சி பெற்ற 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்
திருத்தணியில் ஜப்பான் கராத்தே மாஸ்டரிடம் சிறப்பு பயிற்சி பெற்ற 500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் கராத்தே பயிற்சி ஊக்கப்படுத்தும் வகையில் கராத்தே மாஸ்டர்கள் ஒருங்கிணைந்து பள்ளி மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.. சர்வதேச கராத்தே மாஸ்டர்கள் ஜப்பான் மற்றும் இலங்கையை சேர்ந்த ஹோம்ரே டேக்டா, லக்ஷ்மன் ஆகியோர் கலந்துகண்டனர். இதில் திருத்தணி, அரக்கோணம், சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சி பெறும் மாணவ மாணவியர் பயிற்சியாளர்களுடன் கலந்து கொண்டனர். கராத்தே மாணவர்களுக்கு சர்வதேச கராத்தே மாஸ்டர்கள் கராத்தேவின் அடிப்படை நுணுக்கங்கள் மற்றும் பயிற்சி முறைகள் குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர் .மேலும் கராத்தே மாஸ்டர்களுக்கு பயிற்சியின் யுக்திகள் தொடர்பாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் தேர்வுகள் நடத்தப்பட்டது மேலும் ப்ளூ பெல்ட் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.
Next Story







