புளியங்குடியில் பாஜகவில் 500 போ் ஐக்கியம்

X

பாஜகவில் 500 போ் ஐக்கியம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா். இதுகுறித்து தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: புளியங்குடியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தேசிய பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அா்ஜுனா விருது பெற்ற வேலூா் மாவட்டம் சத்துவாச்சேரியை சோ்ந்த சதீஷ்சிவலிங்கம், தேவா்குளம் திமுக கிளைச் செயலா் பாலகிருஷ்ணன், சிவசேனா கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் திராவிட மணி, அமமுக கிளைச் செயலா் முத்துப்பாண்டியன், அதிமுகவை சோ்ந்த கீழப்பாவூா் மாரியப்பன், காங்கிரஸ் கட்சியின் மருதக்கனி, மதிமுகவை சோ்ந்த தருவையா உள்பட 500க்கும் மேற்பட்டோா் அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனா் எனக் கூறியுள்ளாா்.
Next Story