விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு துறை சார்ந்த பாடங்களில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றனர்.*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு துறை சார்ந்த பாடங்களில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் சாலையில் இயங்கிவரும் ராஜுக்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராமகிருஷ்ணன் பங்கேற்று, பட்டம் பெறும் மாணவ மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் மற்றும் இன்றைய இளம் தலைமுறையின் சமூகப் பங்களிப்பைப் பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் எம்.ஏ., எம்.எஸ்.சி., பி.காம்., பி.பிஏ., பி.எஸ்.சி. உட்பட பல்வேறு துறை சார்ந்த பிரிவில் தேர்ச்சி பெற்ற சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பட்டம் பெற்றனர். பட்டமளிப்பு விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பெருமிதமும் மகிழ்ச்சியுடன் நிகழ்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
Next Story

