கரூரில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்- 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர்.
கரூரில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்- 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா ஆகியோர் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணி ஜவகர் பஜார், பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக சென்று திருவள்ளூர் மைதானத்தில் முடிவடைந்தது. இதில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு பதாகைகளை கையில் ஏந்தியவாறு போதை ஒழிப்பு குறித்த கோஷங்களை எழுப்பினர். பின்னர் போதை பொருட்களை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் எனவும் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவல்துறையினர், மற்றும் கல்லூரி தாளாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story





