சர்வதேச செஸ் போட்டியில் 500 பேர் பங்கேற்பு

X
திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளி, ஆர்.வி.சதுரங்க அகாடமி சார்பில், சர்வதேச செஸ் போட்டி, கடந்த 15-ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.போட்டியில் அமெரிக்கா, எகிப்து, ஜெர்மனி, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள் உட்பட 500 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற 170 மாணவ - மாணவியருக்கு, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை மியான்மர் ஒன்றிய குடியரசின் கவுரவ துாதர் ரங்கநாதன், விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளியின் கல்வி ஆலோசகர் மாலதி ஆகியோர் வழங்கினர்.
Next Story

