ராசிபுரம் அருகே முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு...

X
Rasipuram King 24x7 |18 Dec 2025 8:02 PM ISTராசிபுரம் அருகே முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடந்த இம்முகாமில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை ஆலோசனை, குழந்தை நலம் மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் நோய் மருத்துவம், நீரிழிவு நோய், நுரையீரல் நோய்களுக்கு சிகிச்சை ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், மருத்துவ பரிசோதனைகள், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்முகாமில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு முகாமை ஆய்வு செய்தார். நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, கல்லூரி தாளாளர் ரா.முத்துவேல் ராமசாமி, மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
