ராசிபுரத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி : 500.க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு..

ராசிபுரத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி : 500.க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு..
X
ராசிபுரத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி : 500.க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு..
தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் தனியார் பார்மசி கல்லூரி சார்பில் நடந்த இந்த பேரணியை, ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் சாலை மேம்பாலம் அருகே தொடங்கிய பேரணியானது, ராசிபுரம் பழைய பஸ் நிலையம், கடைவீதி மற்றும் ஆத்தூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக பேரணி நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி ஊர்வலமாக நடந்துச் சென்றனர். மேலும் சாலை விதிகளை மதிப்போம், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகன ஓட்டு, இருசக்கர வாகனம் இருவர் செல்ல மட்டுமே, என விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் காந்தி ஆசிரமம் திருச்செங்கோடு தலைவர் கஸ்தூரி காந்தி பார்மசி தனியார் கல்லூரி தாளாளர் சிதம்பரம், மற்றும் மோட்டார் வாகன அலுவலர்கள், அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story