உலக புற்றுநோய் தினம்: நாமக்கல் தங்கம் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான் – 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு!

X
Namakkal King 24x7 |4 Feb 2026 4:45 PM ISTஉலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருளான “தனித்தன்மையால் ஒன்றிணைவோம்” என்பதைக் மையமாகக் கொண்டு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே இன்னும் குறைவாகவே ரஉள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் தங்கம் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.தங்கம் மருத்துவமனை நிறுவனர்கள் மருத்துவர் இரா. குழந்தைவேல், மருத்துவர் மல்லிகா குழந்தைவேல் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு வாக்கத்தான், நாமக்கல் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி, ஐபிஎஸ் மற்றும் நாமக்கல் ரோட்டரி சங்கத் தலைவர் சேகர் சங்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருளான “தனித்தன்மையால் ஒன்றிணைவோம்” என்பதைக் மையமாகக் கொண்டு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான் தங்கம் மருத்துவமனையில் தொடங்கி, பரமத்தி ரோடு, உழவர் சந்தை, பூங்கா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் தங்கம் மருத்துவமனையிலேயே நிறைவடைந்தது.இந்த நிகழ்வில் தங்கம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், நாமக்கல் மகப்பேறு மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் சந்திரா பொன்னுசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள், இந்திய மருத்துவச் சங்க மகளிர் பிரிவு, ரோட்டரி கிளப், இன்னர் வீல் கிளப் உறுப்பினர்கள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும், செவிலியர் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று, பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story
