சின்ன குன்றக்குடி மஞ்சு விரட்டில் 500 காளைகள் பங்கேற்பு மாடுகள் முட்டியதில் 40 பேர் காயம்

X
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகப்பெருமான் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று சின்ன குன்றக்குடியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார். தொழுவிலிருந்து சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 152 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 25 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இது தவிர, கட்டுமாடுகளாக ஆங்காங்கே பொட்டல் பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 13 பேர் தீவிர சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story

