செம்படம்பாளையத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை முன்னிட்டு 5,000- பேருக்கு முட்டையுடன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி.

செம்படம்பாளையத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை முன்னிட்டு 5,000- பேருக்கு முட்டையுடன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி.
செம்படம்பாளையத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை முன்னிட்டு 5,000- பேருக்கு முட்டையுடன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து திமுக கட்சியினர் தமிழக முழுவதும் கொண்டாடினர். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, செம்படம்பாளையம் பகுதியை சேர்ந்த தோகை முருகன் தலைமையில், அவரது வீட்டின் அருகே அமைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் உள்ள செந்தில் பாலாஜியின் திருவுருவப்படத்திற்கு பால்அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 5 ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி, முட்டை மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் இன்று வழங்க திட்டமிட்டு பிரியாணியை தயார் செய்தார். பிறகு பிரியாணியை பொட்டலங்களாக தயார் செய்தார். இந்த பிரியாணி பொட்டலங்களை புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புகலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரியாணி பொட்டலங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
Next Story