அதிமுக நூற்றாண்டு விழா மற்றும் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 5000 மரக்கன்று வழங்கிய அதிமுக நிர்வாகி
Ariyalur King 24x7 |6 Jan 2025 5:31 PM GMT
அதிமுக நூற்றாண்டு விழா மற்றும் அதிமுக நிர்வாகி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 5000 மரக்கன்றுகள் மற்றும் புடவைகள், அன்னதானம் வழங்கியதற்கு பொதுமக்கள் பல்வேறு கட்சியை அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அரியலூர், ஜன.6- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ்.கே. பழனிவேல். அதிமுகவின் தீவிர விசுவாசியான இவர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கிராம வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி பாகுபாடு இன்றி செய்து வருகிறார். இந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி ஆன இவரது பிறந்த நாள் மற்றும் அதிமுகவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குதல் மற்றும் மரக்கன்று வழங்குதல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டார் அதன்படி அரியலூர் திருமானூர் தத்தனூர் ஆகிய கிராமங்களுக்கு சென்ற இவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர் பின்னர் இறுதியாக தா பலூன் கடை வீதியில் கழகத் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு பட்டாசு வெடித்து உற்சாகத்தோடு வரவேற்றனர் பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றி பேசினார் அப்போது அவர் பேசுகையில் அதிமுகவின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது இதே போன்று தொடர்ந்து கழக வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் நிர்வாக திறனற்ற ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சர் ஆக எடப்பாடியாரை கொண்டு வருவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளோம் என அவர் பேசினார். இந்த நிகழ்வில் திருமானூர், தா பழூர் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் சமூக அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story