செஞ்சி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

X
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் சுபாஷ், 33. இவர், தனக்கு சொந்தமான 17.5 சென்ட் இடத்திற்கு சப்-டிவிஷன் செய்து பட்டா மாற்றம் கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன், விண்ணப்பம் செய்தார்.இந்த மனு மீது சப்டிவிஷன் செய்து பட்டா மாற்றம் செய்ய அந்த பகுதியில் வி.ஏ.ஓ.,வாக உள்ள வீரணாமூர் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, 53, என்பவர் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து சுபாஷ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று பகல் 2:00 மணிக்கு செஞ்சியில் வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு வாடகைக்கு ரூபம் எடுத்து நடத்தி வரும் அலுவலகத்திற்கு சென்ற சுபாஷ், 5,000 ரூபாயை அவரிடம் கொடுத்தார்.திருநாவுக்கரசு வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.பின், திருநாவுக்கரசை செஞ்சி தாசில்தார் அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
Next Story

