ராசிபுரம் அருகே மலையாள தெய்வம் ஶ்ரீ பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா.ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடா வெட்டி சமபந்தி விருந்து. 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

X
Rasipuram King 24x7 |5 Aug 2025 6:55 PM ISTராசிபுரம் அருகே மலையாள தெய்வம் ஶ்ரீ பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா.ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடா வெட்டி சமபந்தி விருந்து. 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் மலையாள தெய்வம் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோயிலில் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடாவெட்டி, பொங்கல் வைப்பது வழக்கம். விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு கிடாவெட்டி தங்களது காணிக்கைகளை அம்மனுக்கு படைத்து வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழாவானது பூச்சாட்டுகளுடன் துவங்கி முன்னதாக பொங்களாயி அம்மன் சுவாமி மற்றும் விநாயகர் சாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்து படையல் மற்றும் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. இரவு கிடாக்களை சுவாமிக்கு முன் பூஜை செய்து பலி கொடுக்கப்பட்டு பின்னர் வெட்டப்பட்ட கிடாக்களை அங்கே இரவு முழுவதும் சமைத்து அதிகாலையில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த சமபந்தி விருத்திக்காக 232 கிடாக்கள் வெட்டப்பட்டு சுமார் 3000 கிலோ கறி சமைக்கப்பட்டு, 500 கிலோக்கு மேலான அரிசியை பொங்கல் வைத்து அதனை உருண்டையாக செய்து ஆண்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. சமபந்தி திருவிழாவில் சேலம், கரூர்,திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 5000கக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். கடந்த 200 வருடங்களுக்கு முன்பு திருவிழா சமயத்தில் கனமழை பெய்ததால் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்ததாகவும் இதனால் பெண்கள் விழாவில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது. இந்த கோவிலில் வேண்டுதல் வைத்தால் திருமண தடை நீங்கும், என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது..
Next Story
