திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு தளத்தில் 5000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்ட வரலாற்று எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

Tenkasi King 24x7 |13 Dec 2025 11:03 PM ISTதிருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு தளத்தில் 5000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்ட வரலாற்று எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
தென்காசி மாவட்டத்திற்கு உலக அளவில் பாராட்டைப் பெற்ற மிக சிறப்பான விஷயம், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு தளத்தில் 5000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்ட வரலாற்று எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மக்கள் பயன்படுத்தப்பட்ட பானைகள், ஈமத்தாழிகள் (இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட பெரிய பானைகள்), பாதுகாப்பு மற்றும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட வேல் ஈட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருமலாபுரம் 5000 வருடங்களுக்கு முற்பட்ட நாகரிகத்தை உடையதாகும். இவை இரும்பு காலகட்டத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. உலகில் மிகவும் பழமையான எகிப்து நாகரிகத்திற்கு இணையாக உள்ளதாகும். இதனால் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது தென்காசி மாவட்டம் திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு தளம்.
Next Story
