சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை.

X
Sirkali King 24x7 |16 Dec 2025 2:38 PM ISTசீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை.
சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை. காட்டு பன்றிகளை விரைந்து அப்புறப்படுத அரசுக்கு கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அல்லி விளாகம்,காத்திருப்பு, செம்பதனிருப்பு, நடராஜ பிள்ளை சாவடி, கருவி, ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கர் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் நன்றாக விளைந்த கரும்புகளை நல்ல விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.இன்னும் 15 முதல் 20 தினங்களில் அறுவடைக்கு தயாரான கரும்புகளில் தற்போது காட்டு பன்றிகளின் தாக்கத்தால் செங்கரும்பு விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இரவு நேரங்களில் கரும்பு வயல்களில் கூட்டம் கூட்டமாக உட்புகும் காட்டு பன்றிகள் கரும்புகளை வேரோடு கடித்து சாய்த்து தின்று அழித்து வருகிறது. அல்விளாகம் பகுதியில் விவசாயி முத்துக்குமார் பயிரிட்டிருந்த 10 ஆயிரம் கரும்புகளில் தற்போது வரை 5ஆயிரம் கரும்புகள் காட்டு பன்றிகளால் பாதிக்கப்ட்டுள்ளது. இதனால் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயி சுற்றுவட்டார பகுதி முழுவதுமே காட்டு பன்றிகளின் தாக்கத்தால் செங்கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு வாழை உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தும் காட்டு பன்றிகளை அப்புப்படுத்தக்கோரி பல முறை கோரிக்கை விடுத்த நிலையில் காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியும் இதுவரை வனத்துறை நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விரைந்து இப்பகுதியில் உள்ள காட்டு பன்றிகளை சுட்டு பிடித்தோ அல்லது உயிருடன் பிடித்தோ அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
