நாகம்பட்டி கல்லூரியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா : ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்பு

X
Ottapidaram King 24x7 |17 Dec 2025 10:42 PM ISTநாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியில் 25- ஏக்கர் பரப்பளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு வனத்துறை,வனச்சரகம் சார்பில் 5025-மரக்கன்றுகள் நடும் பணி விழா நடந்தது. விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி வி.மார்கண்டேயன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள் இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா வனச்சரக அலுவலர் பாபு நாட்டு நல பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் கல்லூரி முதல்வர் முருகானந்தம் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் செல்வி பேராசிரியர்கள் சேதுராமன்,பவானி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் கிளைச் செயலாளர்கள் ஸ்ரீனிவாசகம்,ரகு,பெருமாள் இளைஞரணி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிங் நியூஸ் செய்தியாளர் S.முகேஷ் குமார் ஓட்டப்பிடாரம்.
Next Story
