பெண்கள் சுயதொழில் செய்ய ரூ.50,000 மானியம்

பெண்கள் சுயதொழில் செய்ய ரூ.50,000 மானியம்
சிவகங்கை மாவட்டம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் (ம) பேரிளம் பெண்கள் ஆகியோர்கள் சுயதொழில் செய்து பயன்பெற ரூ.50,000/- மானியம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சிவகங்கை மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் (ம) பேரிளம் பெண்கள் ஆகியோர்கள் சுயதொழில் செய்திட ரூ.50,000/- மானியம் வழங்கப்படுகிறது. இம்மானிய திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள், 25 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாகவும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இதில், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதுமட்டுமன்றி, ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவராவர். மேலும் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய அறிவிப்பு (Self Declaration Certificate), வருமானச் சான்று ( Income Certificate), குடும்ப அட்டை நகல் (Ration Card Xerox), ஆதார் அட்டை நகல் (Aadhar Card Xerox), தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று ( Any proof for current resident Address) ஆகிய சான்றுகளை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் இணைத்திடல் வேண்டும். தகுதியான நபர்கள் tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையத்தை பயன்படுத்தி, ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின்னர், மேற்குறிப்பிட்டுள்ள ஆவண நகல்கள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கருத்துருவினை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, மானியம் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story