கோவை: ரூ.50,000 லஞ்சம் பெற்ற தாசில்தார் உள்ளிட்ட இருவர் கைது !

கோவை: ரூ.50,000 லஞ்சம் பெற்ற தாசில்தார் உள்ளிட்ட இருவர் கைது !
X
சொத்து இறுதிச் சான்றிதழ் வழங்க ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக, வட்டாட்சியர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது.
கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சொத்து இறுதிச் சான்றிதழ் வழங்க ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக, வட்டாட்சியர் ரமேஷ்குமார் மற்றும் கிராம உதவியாளர் சரவணன் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையால் இன்று கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். பழனிசாமி என்பவருக்காக சொத்து சான்றிதழுக்காக விண்ணப்பித்த ரஞ்சித் குமாரிடம் பலமுறை லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இன்று அலுவலகத்தில் சரவணனிடம் பணம் ஒப்படைக்கப்பட்டதும், பதுங்கியிருந்த அதிகாரிகள் திடீரென விரைந்து வந்து பினோல்ஃப்தலீன் சோதனை மூலம் லஞ்சம் உறுதி செய்தனர். ரூ.50,000 பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story