ராசிபுரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா 50.000 வடைகள் கொண்டு சிறப்பு அலங்காரம்..

X
Rasipuram King 24x7 |19 Dec 2025 8:01 PM ISTராசிபுரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா 50.000 வடைகள் கொண்டு சிறப்பு அலங்காரம்..
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள் அனுமன். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள் புரியவும் அனுமானை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும் புண்ணியமும் வந்து சேரும். மார்கழி மாதம் அமாவாசை உடன் வரும் மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது அதன்படி இந்த ஆண்டும் ஹனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராசிபுரம் சேலம் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திரு.உ.வே.வ.பாபு(எ) கஸ்தூரி பட்டாச்சாரியார் அவர்கள் தலைமையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு 50,000 வடமாலைகள் உடன் வெள்ளிக்காப்பு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு வடமாலை பிரசாதம் மற்றும் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பித்தனர்.
Next Story
