கரூரில், லயன் சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 501- தலைக்கவசம் வழங்கி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை எஸ் பி துவக்கி வைத்தார்.

கரூரில், லயன் சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 501- தலைக்கவசம் வழங்கி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை எஸ் பி துவக்கி வைத்தார்.
கரூரில், லயன் சங்கம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 501- தலைக்கவசம் வழங்கி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை எஸ் பி துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது கரூர் லயன் சங்கம். லயன் சங்கத்தின் மாவட்ட ஆளுநர் இன்று கரூர் வருகையை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஒரு நிகழ்ச்சியாக, பயணத்தின் போது தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் 501- இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கின் வளாகத்தில் இருந்து லயன் சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, பின்னர் தானும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணி கோவை- கரூர் சாலை வழியாக கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, ஜவகர் பஜார் வழியாக சென்று கரூர் மாநகராட்சியை அடைந்தது. பேரணியின் போது 500க்கும் மேற்பட்ட தலை கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகள், இருசக்கர மோட்டார் வாகன பயணத்தின் போது, கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் ஹோஸ்ட் லயன் சங்க தலைவர் பிரபுராஜ், மாவட்ட ஆளுநர் சவரிராஜ், கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட லயன் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story