வேலூரில் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 508 கோரிக்கை மனுக்கள் பெறல்
கூட்டத்தில் மனுக்கள் பெறல்
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பொதுமக்களிடம் 508 கோரிக்கை மனுக்களை பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் ,
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடைப்பெற்றது. மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை காவல்துறை ஊரக வளார்ச்சித்துறை நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சர்பாக வீடுகள் வேண்டி,
மின்சாரத்துறைசார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள் குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 508 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டுசம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணைமேற்கொண்டுதகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.