முத்து மாரியம்மன் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை!

முத்து மாரியம்மன் கோவிலில் 508 திருவிளக்கு பூஜை!
X
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்து மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு 508 திருவிளக்கு பூஜையை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். 
தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்து மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு 508 திருவிளக்கு பூஜையை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மேலசண்முகபுரம் வண்ணார் 3வது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 22ஆம் தேதி கணபதி ஹோமம் கும்ப பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மாலை 5 மணிக்கு நல்லாசிரியர்விருது பெற்ற விஜயலட்சுமி திருமணி சொற்பொழிவு நடந்தது. பின்னர் இரவு 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார். மேலும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு தங்க நாணயம், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், நாடார் மகிமை தலைவர் கேஏபி சீனிவாசன், கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், சண்முகபுரம் வட்ட பிரதிநிதி சண்முகராஜ், கோவில் பொதுச் செயலாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர்கள் பிரபு, செயலாளர் பிஎஸ் பொன்ராஜ், துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் பழனிக்குமார் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story