தந்தை பெரியார் 51 வாது நினைவு நாள்

தந்தை பெரியார் 51 வாது நினைவு நாள்
X
வாணியம்பாடியில் தந்தை பெரியாரின் நினைவு நாள் அனுசரிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளான இன்று மரியாதை செலுத்தப்பட்டது திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் வாணியம்பாடியில் உள்ள மாவட்ட கழக அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார், மாவட்டப் பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதிரன், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள்பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி, மாவட்ட அணிகளின் து.அமைப்பாளர்கள் சக்கரவர்த்தி, மேகநாதன், மாவட்டப் பிரதிநிதிகள் சி.சிவகுமார், மனோகரன், அம்பலவாணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
Next Story