கரூரில் தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

கரூரில் தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கரூரில் தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் 51 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கரூர் வடக்கு மாநகர தவெக சார்பில் நடைபெற்ற இந்த முகாமை மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் கண் புரை, க்ளோகோமா, கருவிளி சேவை, விழித்திரை சிகிச்சை, குழந்தை கண் மருத்துவம், முழங்கால் வலி, மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி, தோள்பட்டை வலி, தசைபிடிப்பு, பக்கவாதம், முகவாதம், நரம்பு உபாதைகள், எலும்பு தசை உபாதைகள், AI ரோபோடிக்கல் பல் பரிசோதனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் செயல் திறன் கண்டறிதல் உள்ளிட்டவற்றிற்கு மருத்துவ பரிசோதனையும், இலவச சிகிச்சையும் வழங்கப்பட்டது. கரூர் வடக்கு மாநகர பொருளாளர் மாசி பவுன்ராஜ் ஏற்பாட்டில் நடந்த இந்த முகாமில் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய் பிரசாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
Next Story