அரவக்குறிச்சி- தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள்- இலவச மருத்துவ முகாம்.

அரவக்குறிச்சி- தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள்- இலவச மருத்துவ முகாம்.
அரவக்குறிச்சி- தவெக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள்- இலவச மருத்துவ முகாம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் 51 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று தமிழக வெற்றி கழகம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த முகாமை மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் கண் புரை, க்ளோகோமா, கருவிழி சேவை, விழித்திரை சிகிச்சை, குழந்தை கண் மருத்துவம், முழங்கால் வலி, மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி, தோள்பட்டை வலி, தசைபிடிப்பு, பக்கவாதம், முகவாதம், நரம்பு உபாதைகள், எலும்பு தசை உபாதைகள், AI ரோபோடிக்கல் பல் பரிசோதனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் செயல் திறன் கண்டறிதல் உள்ளிட்டவற்றிற்கு மருத்துவ பரிசோதனையும், இலவச சிகிச்சையும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story