கோவை: முதாட்டி வீட்டில் 51 பவுன் நகை ரூ.1.50 லட்சம் திருட்டு !

X

மூதாட்டியின் வீட்டில் 51 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பீளமேடு விளாங்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள காந்தி மாநகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செந்தமிழ் செல்வி (வயது 70). இவர் தனது மூத்த மகன் குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரது மருமகன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் வீட்டில் சகாய மணி என்ற பெண் கடந்த 6 மாதங்களாக வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது கணவரைப் பார்க்க செந்தமிழ் செல்வி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர் மருத்துவ செலவுக்காக வீட்டில் இருந்த நகைகளை அடகு வைக்கலாம் என்று பீரோவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த 51 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து செந்தமிழ் செல்வி நேற்று சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வந்த சகாய மணி என்ற பெண் மீது சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story