அரக்கோணம் ரயில் நிலையத்தில் 510 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

X
அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் விதமாக அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று போலீசார் ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் மேற்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கேட்பாரற்று அடுக்கி வைத்திருந்த 17 மூட்டைகளில் இருந்து சுமார் 510 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ராணிபேட்டை வட்ட வழங்கல் அலுவலர் ரவியிடம் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

