தஞ்சாவூர் அருகே, 5,100 கிலோ ரேஷன் அரிசி, கடத்தல் லாரி பறிமுதல் 

தஞ்சாவூர் அருகே, 5,100 கிலோ ரேஷன் அரிசி, கடத்தல் லாரி பறிமுதல் 
X
பறிமுதல்
தஞ்சையில் மினி லாரியில் 5 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஓட்டுநர் உள்பட 3 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். ரேஷன் அரிசி கடத்தல் தஞ்சை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் நித்யா மேற்பார்வையில், ஆய்வாளர் ஜெகதீசன், உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், புதன்கிழமை தஞ்சை ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர்.  அப்போது அந்த மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 5 ஆயிரம் கிலோ பறிமுதல் இந்த ரேஷன் அரிசியை தஞ்சை டவுன், ஆர்.எம்.எஸ்.காலனி, நாஞ்சிக்கோடடை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு வாங்கி அதனை இட்லி மாவு அரைப்பதற்காக அரவை மில்லுக்கும், தீவனத்திற்காக மீன் பண்ணைகளுக்கும் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 102 மூட்டைகளில் இருந்த 5 ஆயிரத்து 100 கிலோ அரிசி மற்றும் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.  மேலும், இது தொடர்பாக அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்குபவரான தஞ்சை கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த மணிவண்ணன் (வயது 37), மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தஞ்சை தொல்காப்பியர் நகர் 5-ஆவது தெருவை சேர்ந்த வாவர் (வயது 26), லோடுமேன் நாஞ்சிக்கோட்டை ஜெயபூங்காவனம் நகரை சேரந்த ஜலீல்ரகுமான் (34) ஆகியோரை கைது செய்தனர். ஒருவர் தலைமறைவு ரேஷன் அரிசியை வாங்கி வியாபாரம் செய்து வந்தவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 3 பேரையும் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story