அரசு பேருந்தில் தீ விபத்து உயிர் தப்பிய 52 பயணிகள்
Dharapuram King 24x7 |27 Sep 2024 8:41 AM GMT
அரசு பேருந்தில் தீ விபத்து உயிர் தப்பிய 52 பயணிகள்
அரசு பேருந்தில் தீ விபத்து உயிர் தப்பிய 52 பயணிகள் திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக தாராபுரம் பைபாஸ் சாலையில் தீ விபத்து. சாமர்த்தியமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர். உயிர் தப்பிய 52 பயணிகள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தாராபுரம் பேருந்து நிலையம் அருகே அலங்கியம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது திடீரென முன்பக்க ஸ்டேரிங் அருகே திடீரென தீப்பிடித்ததை அறிந்த பேருந்து ஓட்டுனர் கணேசமூர்த்தி வயது 55 ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை பைபாஸ் சாலையில் ஓரமாக நிறுத்தினார். இதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அனைத்து பயணிகளிடம் பேருந்தில் லேசாக தீப்பிடித்ததை பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகளிடம் கூறினார். இதை எடுத்து சாலையில் ஓரமாக நின்றிருந்த பேருந்தில் இருந்து 52 பயணிகள் சாமர்த்தியமாக பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கினர். இதைத் தொடர்ந்து லேசாக பற்றிய தீ மல மலர் பற்றி பேருந்து முழுவதும் பரவியது. இந்த தீ பரவியில் பேருந்து முழுவதும் முற்றிலும் எரிந்து கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுநர் மற்றும் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொதுமக்கள் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். 52 பயணிகள் திருச்செந்தூர் செல்வதற்காக மாற்றுப் பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டு மாற்று பேருந்தில் ஏறும்போது பேருந்தில் இடமில்லாததால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பேருந்து பயணிகள் தங்களுக்கு தனி பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து திருச்செந்தூர் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் என் சம்பவத்தை அறிந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் மாயவன்,மூலனூர் காவல் ஆய்வாளர் விஜயா மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் இருந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது இருப்பினும் பேருந்து முழுவதும் முற்றிலும் இருந்து சேதமானது. இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story