ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் 52ம் ஆண்டு ஆடித்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்.
ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் 52ம் ஆண்டு ஆடி திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயிலில் 52வது ஆண்டு ஆடித் திருவிழா வரும் ஜூலை மாதம் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது குறித்து விழாக்குழுத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கோயிலில் கடைசியாக கும்பாபிஷேகம் செய்து 12 வருடங்கள் முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை 16 அன்று மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவது என்றும் இதற்கான பாலாலயத்தை ஏப்ரல் 16 அன்று துவக்க இருப்பதாகவும் முடிவு செய்தனர். மேலும் கும்பாபிஷேக திருப்பணிகளான ஆலய வளாகம், கோபுரங்களில் பஞ்சவர்ணம் செய்வது, கோயிலின் ராஜகோபுர வாயில் கதவிற்கு பித்தளை தகடு அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். வருடந்தோறும் ஆடி வெள்ளி திருவிழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. அதோபோல் இந்த ஆண்டு ஜூலை 17 அன்று 501 குத்துவிளக்கு பூஜையும், ஜூலை 18 அன்று பிரம்மாண்ட நூதன புஷ்ப பல்லக்கு நடத்துவது என்றும், ஜூலை 19 அன்று திரைப்பட இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீ காந்த்தேவா, எஸ்.பி.பி சரண், விஜய்ஏசுதாஸ், மனோ ஆகியோரில் யாரேனும் ஒருவரை அழைத்து இன்னிசை கச்சேரி நடத்துவது என்றும் முடிவு செய்தனர். ஜூலை 18 அன்று நூதன பூஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது. பல்லக்கின் முன்னே கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், உருமி மேளம், நாதஸ்வர நிகழ்ச்சி, நாசிக் டோல் வான வேடிக்கை உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர். மேலும் கோயில் கருவறையில் விழாவிற்கு முன்பே பித்தளை கவசம் அமைக்கும் நடத்தினர். இதில் விழா குழுவினர்கள் சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், பி.நடராஜன், குணா, செல்வராஜ், ஜி.சங்கர், பேராசிரியர் கே.சிவா, ஆசிரியர் ஏழுமலை, இயைராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



