கமிட்டியில் ரூ.52.46 லட்சம் வர்த்தகம்

X

வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 52.46 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, எள் 480 மூட்டை, மக்காச்சோளம் 460, கம்பு 25, வரகு 18, உளுந்து, வேர்க்கடலை தலா 10 மூட்டைகள் என மொத்தம் 993 மூட்டைகள் விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 8,435 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,264, கம்பு 2,404, வரகு 2,181, உளுந்து 4,308, வேர்க்கடலை 7,111 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 52 லட்சத்து 46 ஆயிரத்து 693 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 85 மூட்டை, எள் 28, விரலி மஞ்சள் 2 மூட்டை என 115 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,324 ரூபாய், எள் 9,866 மற்றும் விரலி மஞ்சள் 9,401 ரூபாய் என 4 லட்சத்து 6 ஆயிரத்து 89 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் எள் 40 மூட்டை, நெல் 35, மக்காச்சோளம் 20, கம்பு 6, உளுந்து, பச்சைப்பயிர் தலா ஒரு மூட்டை என 103 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக எள் 8,750 ரூபாய், நெல் 1,985, மக்காச்சோளம் 2,329, கம்பு 2,389, உளுந்து 5,600, பச்சைப்பயிர் 5,000 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 4 லட்சத்து 76 ஆயிரத்து 135 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
Next Story