ராசிபுரம் அருகே ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு

ராசிபுரம் அருகே ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு
ராசிபுரம் அருகே ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலப்பள்ளிப்பட்டி, ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி, மத்துருட்டு, மங்களபுரம், ஆயில்பட்டி கார்கூடல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் பங்கேற்று ரூ.5.26 கோடி மதிப்பில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் திறந்து வைத்தார். ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொகுதிக்குட்பட்ட மூலப்பள்ளிப்பட்டி, திம்மநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் தலா ரூ.8 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 22 எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சியில் ரூ.9.16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கு மாதா கோயில் முதல் பசிரிமலை சாலை வரை 130 மீ நீளம், 4.5 மீ அகலத்திற்கு சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், ரூ.9.16 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோயில் அருகில் சிறுபாலம் அமைக்கும் பணி, ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் ரூ.10.25 லட்சம் மதிப்பீட்டில் காத்தாகவுண்டனூரில் 155 மீ நீளம், 4 மீ அகலத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.7.32 லட்சம் மதிப்பீட்டில் 82 மீ நீளம், 4 மீ அகலத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பிரதமர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூர் மெயின் ரோடு முதல் சிங்கிலியன் கோம்பை சாலை வழி தாண்டாகவுண்டன்பாளையம் மூலக்காடு வேம்பாகவுண்டன் புதூர் வரை தார் சாலை அமைக்கும் பணி, ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் ஆயில்பட்டி ஊராட்சி ஊத்துப்புளிகாடு வழி ஆண்டிகுட்டை சாலை வரை தார் சாலை அமைக்கும் பணி, அயோத்திய தாசர் பண்டிதர் குக்கிராமம் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் கார்கூடல்பட்டி ஊராட்சி, மெட்டாலா குக்கிராமம் புதுக்காலனி சரசு வீடு முதல் கனகராஜ் வீடு வரை கான்கீரிட் சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் முன்னாள் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Next Story