கோவை: உதவித்தொகை பெயரில் 53 ஆயிரம் ரூபாய் மோசடி !

X
கோவை புளியகுளத்தை சேர்ந்த சார்லஸ் பீட்டருக்கு, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை என்ற போலியான புரொஃபைலிலிருந்து வீடியோ கால் வந்தது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் அவரது மகனுக்கு ₹38,500 கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, Gpay க்யூஆர் மற்றும் OTP கேட்டுள்ளனர். இதனால் நம்பிய சார்லஸ் பீட்டர், தனது மாமாவின் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கியுள்ளார். பின்னர் OTP எண்களையும் தெரிவித்ததால், அவர்களின் வங்கி கணக்கிலிருந்து ₹53,000 பறிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் காவல் நிலையத்திலும், கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

