களவு போன 533 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
Madurai King 24x7 |18 Dec 2024 9:12 AM GMT
மதுரையில் களவு போன 533, செல்போன்களை கண்டு பிடித்து உரியவர்களிடம் இன்று காவல் ஆணையர் வழங்கினார்.
மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 533 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை மாநகர சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் 533 செல்போன்கள் மீட்கப்பட்டன. (கோவில் சரகம் -35, தெற்குவாசல் சரகம் -04, திருப்பரங்குன்றம் சரகம் -13, அவனியாபுரம் சரகம் மற்றும்-08, திடீர்நகர் சரகம் -95, திலகர் திடல் சரகம் -25, தல்லாகுளம் சரகம் -216, செல்லுார் சரகம் - 32, அண்ணாநகர் சரகம் - 105,) மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் இன்று (டிச.18) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் உரியவர்களிடம் வழங்கினார். உடன் மாநகர துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு, தலைமையிடம் மற்றும் போக்குவரத்து ஆகியோர் இருந்தனர். இதன் மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூபாய் 53,30,000 ஆகும்.
Next Story