இனங்கனூர் - ரூ.53.68 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி துவக்க விழா.எம் எல் ஏ இளங்கோ பங்கேற்பு.
இனங்கனூர் - ரூ.53.68 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி துவக்க விழா.எம் எல் ஏ இளங்கோ பங்கேற்பு. கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தில் உள்ள இனங்கனூர் பகுதியில் ரூபாய் 53.68 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் எஸ் மணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,அரசுத்துறை அதிகாரிகள்கலந்து கொண்டனர். பூமி பூஜை முடிந்த பிறகு மார்க்கம்பட்டி ரோடு சூரிபாளையம் முதல் இனங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சாலை அமைக்கும்பணியை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story





