உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகளுக்கு ரூ.53.68 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.
NAMAKKAL KING 24X7 B |29 Oct 2025 5:52 PM ISTபாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வெண்ணந்தூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகள் 503 நபர்களுக்கு ரூ.53.68 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சி பூபதி மாரியம்மன் திருமண மண்டபத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் தலைமையில், வெண்ணந்தூர் ஒன்றியம், வெண்ணந்தூர் பேரூராட்சி மற்றும் அத்தனூர் பேராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 503 பயனாளிகளுக்கு ரூ.53.68 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15.07.2025 முதல் 10.10.2025 வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது 3 கட்டங்களாக நடத்தப்பட்டு முடிவுற்றுள்ளது. இதில் பட்டியலிடப்பட்ட மனுக்கள், பட்டியலிடப்படாத மனுக்கள் என 1,07,755 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 71,720 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முகாம் நடைபெற்ற நாளன்றே உடனடி நடவடிக்கையாக பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு மாற்றம், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் வெண்ணந்தூர் வட்டாரத்தில் 503 பயனாளிகளுக்கு ரூ.53.68 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000/- உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,200/-ஆக உயர்வு, தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, விவசாயிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 7,000 நபர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.852 கோடியில் இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தினை வழங்கியுள்ளார்கள். தற்பொழுது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இராசிபுரம் நகராட்சியில் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும், 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் விடுதி, புத்தகம், உணவு ஆகியவற்றின் கட்டணத்தினை அரசே செலுத்துகிறது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 14 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,88,004/-மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், சக்கர நாற்காலி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அட்டை, வீட்டுவரி பெயர் மாற்றம், இரசீது, பேரூராட்சிகள் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய சொத்துவரி, பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு ஆணை, வருவாய்த்துறையின் சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.42.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 203 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், சான்றுகள், மின்சாரத்துறையின் சார்பில் 35 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 60 பயனாளிகளுக்கு புதிய பதிவு அட்டை, 10 பயனாளிகளுக்கு ரூ.38,800/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 13 பயானாளிகளுக்கு ரூ.9,40,800/- மதிப்பில் பயிர், கால்நடை பராமரிப்பு, நகைக் கடனுதவிகள், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 41 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, சுகாதாரத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டைகள் என மொத்தம் 503 பயனாளிகளுக்கு ரூ.53,67,604/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் எஸ்.ராஜேஷ், வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் ஆர்.எம்.துரைசாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story


