ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், எம்பி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.

ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், எம்பி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.
X
ராசிபுரம் பகுதியில் ரூ.5.38 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், எம்பி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் ரூ.5.38 கோடி மதிப்பில் 4 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நட்டு பூமிபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். இதில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன்‌, மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நட்டு பூமிபூஜை செய்து வைத்தனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம், தரைதளம், முதல்தளம் என மொத்தம் 12658 சதுர அடியில் கட்டப்படவுள்ளது. இதில் தரைதளத்தில் வட்டாட்சியர் அறை, கணினி அறை, அலுவலக அறை, இருப்பறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை, பணியாளர்கள் மற்றும் பொது கழிவறை, முதல் தளத்தில் பதிவறை, சத்திப்பு அறை, அலுவலக அறை, பணியாளர்கள் மற்றும் பொது கழிவறை ஆகியவை அமைக்கப்படுகிறது. தொடர்ந்து வெண்ணந்துார் ஊராட்சியில் அமைந்துள்ள மதியம்பட்டி ஏரியில் 25 ஆயிரம் எண்ணிக்கையில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியினை தொடங்கி வைத்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் நடப்பு 2025-26-ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிராமப்புறங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளட்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திற்கு 200 எக்டேர் பரப்பளவில் 4 லட்சம் வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திட இலக்கு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ராசிபுரம் வட்டாரம், வெண்ணந்துார் ஊராட்சியில் அமைந்துள்ள மதியம்பட்டி ஏரியில் 25 ஆயிரம் எண்ணிக்கையில் கட்லா, ரோகு, மிர்கால் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கடந்த 2024-25 ஆம் ஆண்டில் 100 எக்டேர் பரப்பளவில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் நாமக்கல் மாவட்டத்தில் இருப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகரிக்க செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் மீன் உணவு கிடைத்திட வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், மின்னக்கல் ஊராட்சி, பிள்ளையார் கோவில் காடு பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், அயோத்திதாச பண்டிதர் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கொமராபாளையம் ஊராட்சியில் வெள்ளையங்கரடு அருந்ததியர் தெருவில் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணவேணி வீடு முதல் பழனிவேல் வீடு வரை சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணியினையும், ரூ.8.12 லட்சம் மதிப்பீட்டில் பாக்கியம் வீடு முதல் கோவிந்தன் வீடு வரை சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணியினையும், ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் முனியப்பன் வீடு முதல் விஜயா வீடு வரை சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணியினையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி, அட்மா குழு தலைவர்கள் கே.பி.ஜெகநாதன், ஆர்.எம்.துரைசாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ராம்குமார், வட்டாட்சியர் சசிக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Next Story