ராசிபுரத்தில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டினார்...

X
Rasipuram King 24x7 |31 Aug 2025 6:11 PM ISTராசிபுரத்தில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டினார்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலந்து கொண்டு கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருத்துவர் காலனி பகுதியில் ரூ.13.54 லட்சம் மதிப்பீட்டிலும், குருக்குபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றி நகர் பகுதியில் ரூ.13.47 லட்சம் மதிப்பீட்டிலும், கூனவேலம்பட்டி ஊராட்சி இலுப்பைமரத்து காடு பகுதியில் ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் என 3 இடங்களில் சுமார் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் பொதுமக்களை சந்தித்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சாதனை திட்டங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் கே.பி. ஜெகநாதன், மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்...
Next Story
