மகிமை மாதா ஆலயத்தில் உலக அமைதிக்காக நடைபெறும் 547ஆம் ஆண்டு பெருவிழா
திருவள்ளூர்: பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தில் உலக அமைதிக்காக நடைபெறும் 547ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகிமைமாதாவை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித மகிமை மாதா திருத்தலம் சென்னை மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமாகும் இத்திருத்தலத்ததில் 547 ஆம் ஆண்டு பெருவிழா பத்து நாட்கள் நடைபெறுதை யொட்டி நடைபெற்ற கொடியேற்றத்தில் சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனி சாமி பங்கு தந்தை வர்கீஷ் ரொசாரியோ பங்குமக்கள் பங்கேற்று தேவாலய கொடிமரத்தில் மகிமை மாதாவின் கொடியை ஊர்வலமாக கொண்டு வந்து வாண வேடிக்கையுடன் வண்ண பலூன்களை பறக்கவிட்டும் ஏற்றி வைத்தனர் அதனை தொடர்ந்து திருவிருந்து திருப்பலி தொழுகையும் நடைபெற்றது.முக்கிய விழாவாக மே மூன்றாம் தேதி மகிமை மாதா தேர்பவனி நடைபெறவுள்ளது உலக சமாதானத்தை வலியுறுத்திநடைபெற்ற ஆண்டு பெருவிழா கொடியேற்று விழாவில் சென்னை வேளாங்கண்ணி நாகை செங்கல்பட்டு காஞ்சிபுரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்று மகிமை மாதாவை தரிசனம் செய்தனர்.
Next Story






