துபாய் தொழில் அதிபரிடம் ரூபாய் 55 லட்சம் மோசடி : இளைஞர் கைது

துபாய் தொழில் அதிபரிடம் ரூபாய் 55 லட்சம் மோசடி : இளைஞர் கைது
கைது
தேனி அருகே காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த துபாய் தொழிலதிபரிடம் வங்கிக் கடன் பெற்று தருவதாக கூறி ரூபாய் 55 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த மன்னார்குடியை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்ன காமு மகன் கண்ணன் இவர் துபாயில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கண்ணனிடம் அவரது தொழில் நிறுவனத்துக்கு சரக்கு வாகனங்கள் வாங்க வங்கி கடன் பெற்று தருவதாக கூறி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசித்து வரும் சந்திரசேகரன் மகன் தனசேகரன் கடந்த 2022 பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூபாய் 89 லட்சம் பெற்றாரம். ஆனால் அவர் வங்கிக் கடன் பெற்று தராமல் காலதாமதம் செய்ததால் கண்ணன் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டார். இதையடுத்து தனசேகரன் கண்ணனுக்கு ரூபாய் 34 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு எஞ்சிய தொகை ரூபாய் 55 லட்சத்தை திரும்பத் தராமல் இருந்ததால் இதுகுறித்து கேட்டதற்கு தனசேகரன் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தேனி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் கண்ணன் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து தனசேகரனை கைது செய்தனர்.
Next Story