புன்னம் பகுதியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை காணொளி காட்சியில் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர்.
புன்னம் பகுதியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை காணொளி காட்சி யில் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புன்னம் பகுதியில் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்த ஆய்வகத்தில் ஒரு அறிவியல் ஆய்வகமும் பதிவேடுகள் அறையும் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறையும் உள்ளது. வகுப்பறையில் மாணாக்கர்கள் பாடங்களை சிறந்த முறையில் கற்பதற்கு ஏதுவாக செராமிக் கிரீன் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணாக்கர்கள் தங்களுடைய கல்வி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக கப்போர்டு அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் சக்தி பால கங்காதரன் தாட்கோ உதவி பொறியாளர் வைஷ்ணவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story



