கோவையில் 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் : கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது !

மேட்டுப்பாளையம் ரயில்வே நிலையம் அருகே சோதனை – 3 கேரள வாலிபர்கள் போலீசில் சிக்கினர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மேட்டுப்பாளையம் ரயில்வே நிலையம் அருகே நடத்திய சோதனையில், கேரளாவைச் சேர்ந்த தன்சீர் (35), அபிலாஷ் (32), அனாஸ் (31) ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
Next Story