சுங்கச்சாவடியில் சுமார் 5.50 கோடிக்கு மேல் அவாலாபணம் பறிமுதல்

X
மதுராந்தகம் அருகே சுங்கச்சாவடியில் சுமார் 5.50 கோடிக்கு மேல் அவாலாபணம் பறிமுதல், இருவர் கைது செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியில் இரவு சுமார் 2.30 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து காரைக்குடியை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தை சென்னை வருமான வரித்துறையினர் பேருந்தில் சோதனை நடத்தியதில் இருவரிடம் இருந்து சுமார் 5.5 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் இவை அவாலாபணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.இரண்டு பெரிய சூட்கேஸ் மற்றும் புத்தக பண்டல் போல் இரண்டு பண்டல்கள் என நான்கை பறிமுதல் செய்தனர்.இதனால் பேருந்தை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகசோதனை நடத்தி பேருந்து காக்க வைத்ததால் பயணிகளுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணேசன் அம்ரோஸ் ஆகிய இருவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சென்னை வருமானவரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

