வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.500 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.500 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
X
திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.500 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் குறிப்பிட்ட வீட்டை சோதனையிட்டபோது வீடு முன் நின்ற காரில் 12 மூடைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வீட்டினுள் 98 மூடைகளில் 4 ஆயிரத்து 900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. போலீசார் 5,500 கிலோ ரேஷன்அரிசி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் திண்டுக்கல் மருதாணிகுளத்தை சேர்ந்த வெங்கட்ராமன்(30), சிலுவத்தூர், சங்கிலிதேவனூரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(19) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story