அதம்பையில் 55.2 மி.மீ. மழை

அதம்பையில் 55.2 மி.மீ. மழை
X
வானிலை
தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிகபட்சமாக பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதம்பை தெற்கு கிராமத்தில் 55.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அதம்பை தெற்கு 55.2, நடுக்காவேரி மேற்கு 44.8, துவரங்குறிச்சி 42, ஒட்டங்காடு உக்கடை 40.4, மருங்குளம் 37.2, பாளம்புதூர் 36.8, உதயமுடையான் 35.2, முள்ளுக்குடி, மருத்துவக்குடி தலா 34.8, வீரமரசன்பேட்டை, கீழக்குறிச்சி தலா 34.4, திருமங்கலக்கோட்டை மேலையூர், பாச்சூர், நாச்சியார்கோவில், கபிஸ்தலம் தலா 33.6, வல்லம், அதிராம்பட்டினம், பெருமகளூர் வடபாதி தலா 33.2, ஈச்சங்கோட்டை 30.8, நீலகிரி தெற்கு தோட்டம் 30.4, கண்டியூர் 29.6, வேப்பத்தூர் 28.4, பின்னையூர் மேற்கு 26.4, அகரப்பேட்டை 27.6, மாத்தூர் 26, மெலட்டூர் 22.8, நாட்டாணிக்கோட்டை 20.8, பெரியநாயகிபுரம் 19.6, பெருமாண்டி 18.
Next Story